சிதம்பரத்திலிருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்திற்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் சிதம்பரம் நகருக்கு வரும் புறவழிச்சாலையில் வழியாக வந்து பாதியில் பிரியும் கிள்ளை செல்லும் சாலையின் வழியாக பிச்சாவரத்திற்கு செல்லலாம்.பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீட்டர். மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுண்ணை காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகள் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் சுமார் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.